2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சம்பள உயர்வு தொடர்பான 2ஆம் கட்ட பேச்சு ஒத்திவைப்பு

Kogilavani   / 2015 மே 18 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை, இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் இப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இம்மாத இறுதிக்குள் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் திகதி பின்பு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.   

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .