2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதி சேதம்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

காவத்தை நகரில் இருந்து காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்படுவதால், அவ்வீதியில் பயணிக்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேற்படி வீதியில் காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தம் இந்த வீதி வழியாக பயணிக்கின்றனர். மழை காலங்களில் மேற்படி வீதியின் குழிகளில் நீர் வடிவதால் மாணவர்கள் வெள்ளை உடைகள் அணிந்து செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேற்படி பாடசாலை வீதியை அபிவிருத்தி செய்யுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .