Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 26 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
'புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
'இச்சம்பவமானது எம்மையும் மலையக மக்களையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அநாகரிகமற்ற கொடிய சம்பவத்தை இ.தொ.கா வன்மையாகக் கண்டிக்கின்றது.
யாழ்.குடாநாட்டில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கட்டாய கடமையாகும்.
வித்தியா என்ற மாணவியின் படுகொலையின் சந்தேக நபர்களாக உள்ளவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வருவதோடுஇ அரசியல் செல்வாக்குகளுக்கு உட்படுத்தாது விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இ.தொ.கா.வின் மகளிர் பிரிவு தமது துக்க அனுஷ்டிப்பை மலையகம் முழுவதிலும் ஒரு வாரத்துக்கு அனுஷ்டிக்கவுள்ளது.
இத்தருணத்தில் இ.தொ.கா சார்பில் தமது ஆழ்ந்த அனுதாபங்களை வித்தியாவின் குடும்பத்தார்இ உற்றார் உறவினர்களோடு பகர்ந்து கொள்வதாக தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago