Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மே 27 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாண தமிழ் கல்வியானது திரிசங்கு நிலையில் காணப்படுவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இம்மாகாணத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளிலும் கல்வி வலயங்களிலும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'மத்திய மாகாணத்திலுள்ள சகல மாகாண பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளார். மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சராக எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய மாகாண விவசாய அமைச்சரை தமிழ்க் கல்வியமைச்சர் என சிலர் குறிப்பிடுகின்றனர்' என்றார்.
மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சரின் இணைப்பாளர் என்று சிலர் குறிப்பிடப்படுகின்றனர். மத்திய மாகாணத் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பானவர் என்றும் சிலரைக் குறிப்பிடுகின்றனர். மத்திய மாகாண கல்வியமைச்சு உட்பட பிரதான அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர். இவ்வாறான நிலையில், பலரின் தலையீடுகள் மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் அதிகரித்துள்ளதால் கல்வி அதிகாரிகளும் அதிபர்களும் ஆசிரியர்களும் திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் எத்தகைய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதில்லை. ஆனால், மலையகத் தமிழ்ப் பாடசாலைகளிலும் கல்வித்துறையிலும் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருகின்றமையானது கல்வித்துறையில் மலையகத தமிழ்ச்சமூகம் மேலும் பாதிப்படையும் நிலைமையை ஏற்படுத்தப்போகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago