Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மே 27 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கவிதா சுப்ரமணியம்
வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, முக்கியமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழும் மலையக மக்களை முக்கியத்துவமாகக் கொண்டு புதிய அரசியல் கூட்டமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆராயப்பட்டுவருகின்றது.
இந்த கூட்டமைப்புக்கு முற்போக்கு தமிழர் கூட்டமைப்பு அல்லது ஜனநாயக தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரை சூட்டுவற்கான ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ், நேற்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து உருவாக்கவுள்ள இந்த புதிய கூட்டமைப்பு, மலையம் மற்றும் வடக்கு - கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படும் என அவர் கூறினார்.
நாடாளுமன்றம், பிரதேச சபை, உள்ளூராட்சிமன்றங்களில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த புதிய கூட்டமைப்பு செயற்படும். அத்துடன், எதிர்காலத்தில் சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவற்றையும் இணைத்து செயற்பட இக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அரசுக்கு சார்பானதாகவோ அல்லது அதற்கு எதிரானதாகவோ செயற்படாத இந்த கூட்டமைப்பு, எதிர்வரும் தேர்தல்களில் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சின்னத்தின் கீழோ அல்லது 3 கட்சிகளும் தனித் தனியேயோ போட்டியிடும் என்று லோரன்ஸ் மேலும் கூறினார்.
மேலும் தொகுதிவாரி முறைமைக்கும் விகிதாசார முறைமைக்கும் மலையக பிரதிநிதிகள் 18 பேரும், வட, கிழக்குக்கு வெளியே 20 பேரும் அமைக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது சீர்திருத்தத்துக்கு ஒரு முன்மொழிவொன்றை இந்த கூட்டமைப்பு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago