2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அம்பியுலன்ஸிலிருந்து எரிபொருள் திருடிய இருவர் கைது

Princiya Dixci   / 2015 மே 27 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தம்புள்ளை பிரதான வைத்தியசாலைக்கு சொந்தமாக அம்பியுலன்ஸிலிருந்து எரிபொருள் திருடிய இருவரை திங்கட்கிழமை (25) கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை வைத்தியசாலையின் அம்பியுலன்ஸிலிருந்து எரிபொருளை திருடுவதாக நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த  பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த அம்பியுலன்ஸின் சாரதியும் உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாரானாத் சமரகோன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .