2025 ஜூலை 05, சனிக்கிழமை

அக்குறணை மகளிர் கல்லூரிக்கு தபால் துறை அமைச்சர் விஜயம்

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை மகளிர் கல்லூரியில் நிலவும் குறைபாடுகளை கண்டறிவதற்கு தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அப்பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை நேற்று மேற்கொண்டார்.

இதன்போது இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி  சபை உத்தியோகத்தர் ஆகியோரிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்துகொண்டார்.

இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்;கைகளை மேற்கொள்வதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

இப்பாடசாலையில் இட பற்றாக்குறை காணப்படுவதுடன் மைதானம் இன்மை பாரிய குறையாக காணப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .