2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஓல்டன் பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.இராமசந்திரன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன், கிங்கோரா  பகுதியில்  இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விஸ்வலிங்கம் (வயது 30) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த இளைஞன், மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யபட்டதையடுத்து பொலிஸாரும் பிரதேச மக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (29) காலை வேலைக்குச் சென்றவர்கள் கிங்கோரா நீரோடையில் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .