2025 ஜூலை 02, புதன்கிழமை

விபத்துக்கள்: 28 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்

Kogilavani   / 2015 ஜூன் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரட்ணம் கோகுலன்

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற பஸ் மற்றும் கெப் வாகன விபத்துகளில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்ஸொன்று நேற்று திங்கட்கிழமை இரவு, பெரகல, பிளக்புட் பகுதியில் வீதியை விட்டு கற்பாறையொன்றில் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் இவர்கள் ஹப்புத்தளை, தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கதிர்காமத்திலிருந்து நுவரெலியா நோக்கிசென்ற கெப் வாகனமொன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வெலிமடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் 5 பேர் வெலிமடை ஆதார வைத்தியசாலைகளிலும் மேலும் மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் இரு குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .