2025 ஜூலை 02, புதன்கிழமை

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இரு வாகனங்கள் மீட்பு

Thipaan   / 2015 ஜூன் 02 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைக் கொண்டு, சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதி நவீனரக இரு மோட்டார் வாகனங்களை திங்கட்கிழமை (01) கைப்பற்றியுள்ள வடமேல் மாகாண குற்றப்புனாய்வு பிரிவினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றின் விலை 100 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென தெரிவித்த பொலிஸார், குறித்த வாகனத்தை 12 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தர்ப்;பத்திலேயே கைப்பற்றியதாக கூறினர்.

சந்தேக நபர், குருநாகல், மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்தவரொனவும் பல வருடங்களாக ஜப்பானிலுள்ள வாகனங்கள் பழுதுப்பார்க்கும் வாகன சேவை நிலையத்தில் தொழில் புரிந்துள்ளார் எனவும்  ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .