Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Administrator / 2015 ஜூன் 02 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக, மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார் தலைமையில் புதிய தொழிற்சங்கமொன்று உதயமாகவுள்ளது.
'மலையக தொழிலாளர் உதயம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்தொழிற்சங்கமானது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்தபோதும் அவற்றின் செயற்பாடுகள் மலையக மக்கள் எதிர்பார்க்குமளவுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுத்ததாக இல்லை.
தொழிற்சங்க ரீதியல் பல்வேறு பிரச்சினைகளையே எம் மக்கள் எதிர்கொண்டவர்களாகவே உள்ளனர்.
பிளவுபட்டுள்ள மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட அனைத்து விடயங்களிலும் நன்மைகளை மட்டுமே பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத்தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளோம்' என அவர் கூறினார்.
'இன, மத, அரசியல் பேதமின்றி கடந்த காலத்தில் எமது மக்களுக்காக சேவையாற்றியுள்ளேன். பல்வேறு விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளேன். தொழிற்சங்கமொன்றை உருவாக்கி அதன்கீழ் ஒற்றுமையுடன் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென எனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் விளைவே இந்த புதிய தொழிற்சங்கம் உருப்பெற்றுள்ளது.
சந்தாப்பணமின்றி இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதென்பதே எமது இலக்கு. ஆனால், தொழிற்சங்கங்களுக்குரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவ்வாறு செயற்பட முடியாது.
இந்நிலையில் இத்தொழிற்சங்கங்களுக்கூடாக சிறிய தொகையை அறவிட்டு அந்த பணதை மீண்டும் மக்களுக்கே சென்றடையும் வகையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இத்தொழிற்சங்கம் பற்றிய உத்தியோகப்பூர்வ அறிவிப்பு பின்னர் விடுக்கப்படும்;' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025