2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆசிரிய உதவியாளர்களுக்கான 2ஆம் கட்ட நியமனம் நாளை: கடிதத்தில் அச்சுப்பிழை

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையக ஆசிரியர் உதவியாளரகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட நிகழ்வு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நாளை வியாழக்கிழமை (4) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனத்தின் இரண்டாம் கட்டத்தின் போது 360 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான நியமனக் கடிதங்களில் 'வெளிக்கிழமை' என பிழையாக அச்சிடப்பட்டுள்ளதால் நியமனதாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனை தெளிவுப்படுத்தும் முகமாக கல்வி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடிதங்கள் கிடைக்கப்பெற்றவர்கள்; கொழும்பில் அமைந்துள்ள பத்தரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்துக்கு நாளை வியாழக்கிழமை (04)  வருகை தருமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதன் மூன்றாம் கட்டத்தின்போது 973 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் இந்நிகழ்வு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மட்ட நியமனம் என்பதால் இதனை பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் 3,021 பேருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 1,688 பேருக்கான நியமனங்கள் அண்மையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .