Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 03 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷனி
நமுனுகலை கம்பனி நிர்வாகத்துக்குட்பட்ட ஆறுதோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமது தோட்டங்களை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் இரா.சாலோபராஜா தெரிவிததார்.
மேற்படி கம்பனி நிர்வாகத்துக்குட்பட்ட பசறை, கோணக்கலை, கனவரெல்ல, கந்தசேனை, இந்தகலை, பிங்காராவை மற்றும் கிளனன் ஆகிய ஆறு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே இந்நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி ஆறு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி பதுளை உதவி தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவொன்றை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித் அவர்,
'கடந்த 2006ஆம் ஆண்டு நமுனுகலை தோட்ட கம்பனியிடமிருந்து உப குத்தகை அடிப்படையில் டஸ்கர் பொட்லிங் கம்பனி, மேற்படி ஆறு தோட்டங்களையும் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த எட்டு வருடங்களாக தொழிலாளர்களதும் அவர்களது பிள்ளைகளதும்; பெயர்களை மேற்படி கம்பனி பதிவதற்கான நடவடிக்கை எடுக்காததால் தற்போது அவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற்றப்படும்; அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்படி ஆறு தோட்டங்களும் மீண்டும் நமுனுகலை கம்பனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போதிலும் கடந்த எட்டு வருடங்களாக இடம்பெற்ற முறையற்ற செயற்பாடுகளினால் தற்போது அத்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
இதனால் தேயிலை தொழிலை மட்டும்; நம்பி வாழும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்;.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago