2025 ஜூலை 02, புதன்கிழமை

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் விபரம்

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தலைமையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு, தாஜ்சமுத்திரா ஹோட்டலின் நடைபெற்றது. இதன்போதே இக்கூட்டணியின் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இக்கூட்டணியின் தலைவராக மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசனும் பிரதி தலைவர்களாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனும் செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கூட்டணியின் பொருளாளராக தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர் திலகராஜ், இணை உப தலைவர்களாக அ.அரவிந்தகுமார்(ம.ம.மு), மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார்(ஜ.ம.மு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இணை தவிசாளர்களாக வேலனை வேனியன் (ஜ.ம.மு), வடிவேல் புத்திரசிகமாணி (தொ.தே.ச), எஸ்.விஜேசந்திரன் (ம.ம.மு) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப பொருளாளராக சரத் அத்துகோரள (ம.ம.மு), நிர்வாக செயலாளராக சன் குகவர்தன்(ஜ.ம.மு), பிரதி நிர்வாக செயலாளர்களாக ஜி.நகுலேஸ்வரன் (தொ.தே.ச), சன் பிரபாகரன்   ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .