2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெருந்தோட்ட மக்களுக்கு 20 பேர்ச் காணி வழங்கப்படவேண்டும்

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ஏழு பேர்ச் காணியில் வீடொன்றை அமைத்துக்கொண்டு குடியிருக்க மட்டுமே முடியும். இன்றைய பெருந்தோட்ட நிலவரத்தை அவதானிக்கும்போது இத்தொழிலை எவ்வளவு காலத்துக்கு  நம்பியிருக்கமுடியும்? என்பது கேள்விக்குறியாகும். எனவே, வாழ்வாதாரத்துக்கும்   குடும்பங்களில் நிலவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏதுவாக ஆகக்குறைந்தது 20 பேர்ச் காணியாவது அம்மக்களுக்க வழங்கப்பட வேண்டும்' என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்; வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் பல குடியேற்ற திட்டங்கள் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டாலும் அந்த திட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படவில்லை. 1980களில் வீட்டுப்;பிரச்சினை சற்று ஆவேசமாக இருந்ததினால் இதை மட்டுப்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் தொண்டமான் மற்றும் அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகியோரால் தொழிலாளர்களுக்கு நுவரெலியாவில் காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

வீடு-காணி கோரிக்கைகள் மேலும் வழுவடைந்ததினால் 1992ஆம் ஆண்டளவில் தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக பல வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, இதன்பின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (டிரஸ்ட்) (Plantation Human Development Trust) அமைக்கப்பட்டது.

இந்த நிதியம் ஆரம்பக்காலங்களில் நல்ல பலவேலைத் திட்டங்களை மேற்கொண்டதினால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. சுயமுயற்சி, வீடமைப்பு திட்டத்தில்  ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்குரிய கொடுப்பனவுகள் அனைத்தும் தொழிலாளர்களால் செலுத்தியும் இன்னும் எவ்வித எழுத்து மூலமான உறுதிகளும் வழங்கப்படவில்லை.

ஆனால் கடந்த பல வருடங்களாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் நாளடைவில் ஆமை வேகத்தில் நகர்ந்து தற்போது ஓர் பிரச்சினைக்குரிய நிதியமாக உள்ளது.

இந்த நிதியத்தின் நிலைப்பாடு தொடர்பாக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.  

'லயத்துக்கு மேல் லயம்' என விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட 'மாடி வீட்டு'த் திட்டமும் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு வரவு-செலவுதிட்ட உரையில் முன்னாள் ஜனாதிபதி பெருந்தோட்டத்துறையில் 37 ஆயிரம் ஹெக்டெயர் உற்பத்தி செய்யப்படாத காணிகள் உள்ளதாகவும் அப்படிப்பட்ட காணிகளை இனங்கண்டு காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென தெரிவித்த அதேவேளை 2013ம் ஆண்டு வரவு -செலவுதிட்டத்தில் இப்படிப்பட்ட காணிகளை 25 ஆயிரம் கிராமிய இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென தெரிவித்தார்.  

2014ஆம் ஆண்டுவரவு-செலவுதிட்ட உரையில் இந்த மக்களுக்கு 50 ஆயிரம் மாடி வீட்டுத்திட்டம் அமைப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட பயிரடப்படாத காணிகளை, ஒரு அங்குள நிலம் தானும் இல்லாமல்  லயங்களிலேயே வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன்;வைத்தோம். இதற்காக பல கருத்தரங்குகள், கூட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியதோடு, ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மகஜர்களின் நகல்கள் ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆளுநர்களுக்கும் சமாப்பித்தோம்.

இருப்பினும், இப்பிரச்சினை தீர்வுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததை அவதானிக்கும்போது தொழிலாளர்கள் காலாகாலமாக ஏமாற்றப்படுகின்ற சமூகமாக மாற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் கொஸ்லாந்தை, மீரியபெத்தை தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு இயற்கை அனர்த்தம் பலரை காவுகொண்டதால் தேசிய மற்றும் சர்வதே ரீதியில் தோட்ட மக்களின் அவல நிலையை தெரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது.

 'பசுமைபூமி' பத்திரங்கள் அமைச்சரவை அதிகாரத்தோடு பண்டாரவளையிலும் ஏனைய பிரதேசங்களிலும் வழங்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. இது மிகவும் வரவேற்;கப்பட வேண்டியதோடு ஒரு வரலாற்று சிறப்பாகும்.

இத்திட்டம் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிகளைப்போல் அல்லாமல்  மக்களின் வீடு-காணி பிரச்சினைகளுக்கு எவ்வித சந்தேகமின்றி ஓர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்க்கக்கூடியதாக அமையவேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பாகும்.

தெனியாய, பனில்கந்ததோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 20 பேர்ச் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஓர் உதாரணமாக அமைந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மூன்றாவது, கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனாத்;தங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் சொல்லொனாத் தொல்லைகளுடன் காலத்தைப் போக்கிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு மேலும் காலம் தாழத்தாமல் வீடுகள ;அமைத்துக்கொடுக்கவேண்டும்.

நான்காவது, கடந்த காலங்களில் சுயமுயற்;சி திட்டத்தில் அமைக்கப்பட்ட சகல வீடுகளுக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவேண்டும்.

லய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடவும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை துரித கதியில் நிறைவேற்றவும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர், தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோர் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் அவாவாகும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .