Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 04 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுதர்ஷினி, வி.நிரோஷினி
'வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் அபிவிருத்தி, சலுகை, உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி முனைப்புடன் செயற்படும்' என அக்கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரித்தார்.
மலையகத்திலுள்ள மூன்று பிரதான கட்சிகளும் தமது சுயநலத்தை விட்டுக்கொடுத்து பொதுநலத்துக்காக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் புதன்கிழமை (03) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலங்களில் மலையகத்தில் பல கூட்டணிகள் உருவாக்கப்பட்ட போதிலும் அவற்றுக்கிடையே சுயநலம் மாத்திரமே வேறூன்றி இருந்ததால் இன்று அவை சிதைந்துள்ளன. ஆனால், இன்று உருவாகியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியானது, பொதுநலத்துக்காக அமைக்கப்பட்டதாகும். இது எக்காரணம் கொண்டும் சிதைந்தும் போகாது. யாராலும் சிதைத்துவிடவும் முடியாது' என்றார்.
'மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்களே இன்று தேவை. அந்த வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் அபிவிருத்தி, சலுகை, உரிமை என்பவற்றை பெற்றுக்கொடுக்க இன்று உதயமாகியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி முனைப்படும் செயற்படும்.
மேலும் இது, தேர்தலை இலக்குவைத்து அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. மாறாக தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .