Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
என்னை பழிவாங்குவதாக நினைத்து மாணவர்களை பழிவாங்க வேண்டாமென கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
'மத்திய மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகளில், தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறப்பதில் தொடர்;ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டால் அது மாணவர்களையே பாதிக்கும். இதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை' என்றும் அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆய்வுகூடங்களை, திங்கட்கிழமை(8) கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் திறப்பதற்காக சென்றபோது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'மத்திய மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறப்பதில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் எற்பட்டுள்ளன. இந்த ஆய்வு கூடங்களை மாணவர்களின் பாவனைக்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இதனை அரசியலாக கருதி செயற்படுவதே இதற்கு காரணம்' என்றார்.
'1000 பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கும் கட்டட நிர்மாணத்துக்கும் மத்திய அரசாங்கத்திலிருந்தே கல்வி அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான் அமைச்சரான பின்னர், மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படாமல் உள்ள அனைத்து தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தேன்.
அதன்படி அனைத்து மாகாணங்களிலும் உள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வடக்கு,கிழக்கு,சப்ரகமுவ உட்பட அனைத்து மாகாணங்களிலும் தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் அனைத்துக்குமான ஆயு;வுகூடங்கள் திறக்கப்பட்டன. அங்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை.
அங்குள்ள மாகாண, நாடாளுமன்ற அரசியல்வாதிகளும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
ஆய்வுகூடங்களை யார் திறப்பது என்பது முக்கியமல்ல. அவற்றின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். மாகாண சபைக்கு அதனை செய்ய முடியாது. பாடசாலைகளுக்கு சென்று தவறாக நடப்பதை கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் என்னால் அனுமதிக்க முடியாது' என்றார்.
19 minute ago
20 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
37 minute ago
47 minute ago