Thipaan / 2015 ஜூன் 09 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டகொடை புகையிரத நிலையத்தில் இன்று (09) மாலை 5.45 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டகொடை புகையிரத பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சரக்கு ரயிலும் நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புத்தளை நோக்கிச் சென்ற சரக்கு ரயிலுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் இரு புகையிரதத்தின் சாரதிகளும் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.
இரு புகையிரதத்திலும் பயணித்த சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
வட்டகொடை புகையிரத பொறுப்பதிகாரிகளின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



20 minute ago
21 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
38 minute ago
48 minute ago