Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷனி
'தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில், இச்சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கத்துவம் குறைக்கப்படும். இதனால், சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் மேலும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவர்' என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த அவர், 'அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனால், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் 225ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொகுதிகள்; 160 இலிருந்து 125 ஆக குறைக்கப்பட்டுள்ளன' என்றார்.
'இவ்வாறு நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் தேர்தல் தொகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளமையானது நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளின் அங்கத்துவத்தை குறைக்கும். இதனால், சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் மேலும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவர். எனவே மேற்படி தேர்தல் திருத்தச்சட்ட மூலத்துக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவளிக்கப் போவதில்லை' என்று இராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.
18 minute ago
19 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
36 minute ago
46 minute ago