Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெறும் அதே வேளை, ஜனாதிபதியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றையும் அமைக்குமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
லிந்துலை பிரதேசத்திலுள்ள பம்பரகல குட்டிமலை தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அபிவித்தி அமைச்சின் ஊடாக கூரைத்தகரங்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் தொழிற்சங்க பலத்துடன் செயற்பட்டு வருவதாலேயே இன்று முழு மலையகத் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய வகையில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு எனக்குக் கிடைத்துள்ளது.
இந்த அமைச்சின் ஊடாக எதிர்வரும் காலங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றோம். தோட்டப்பகுதிகளில் எனது அமைச்சு முன்னெடுத்து வருகின்ற தனி வீட்டுத்திட்டம் மற்றும் ஏழு பேர்;சஸ் காணி வழங்குதல் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் புது தெம்மை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டப்பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முதற்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். தோட்டத் தொழிலார் வர்க்கம் ஒற்றுமையுடன் செயற்படுகின்ற போது எமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழுகின்ற தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக நாம் ஏற்படுத்தியுள்ள தமிழ் முற்போக்கு முன்னணி இன்று தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா , ட்ரஸ்ட் நிறுவன தலைவர் புத்திரசிகாமணி, சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன், ட்ரஸ்ட் நிறுவன இயக்குநர் நளின், தோட்ட முகாமையாளர் சில்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23 minute ago
24 minute ago
41 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
41 minute ago
51 minute ago