Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள பெருந் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்காக அப்பிரதேசங்களில் நீண்ட காலமாக தாய்-சேய் பராமரிப்பு சேவையில் ஈடுபட்டுள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் 20 பேர், தம்மை அரச சேவையில் நிரந்தரமாக இணைத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பல முறை அறிவித்தும் தமக்கு உரிய பதில் எதுவும் பெற்றுக்கொடுக்கப்டவில்;லை என குறித்த குடும்பநல உத்தியோகத்தர்; டீ.பி.டி.பத்மகாந்தி தெரிவித்துள்ளார்.
கிராம மக்களின் சுகாதார சேவைகளை நிறைவேற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களைவிட, தோட்டபுறத்தில் சேவையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
எனினும், குறித்த தோட்டங்களில் பணிபுரியும் 20 குடும்பநல உத்தியோகத்தர்களும் தம்மை அரச சேவையில் நிரந்தரமாக்குமாறு 2009ஆம் ஆண்டு முதல் அரசாங்கம், சுகாதார அமைச்சு மற்றும் மத்திய மாகாண சுகாதார அமைச்சு என்பனவற்றிடம் உரிய காரணங்களை சமர்ப்பித்த போதிலும் அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.
26 minute ago
27 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
44 minute ago