Sudharshini / 2015 ஜூன் 24 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டொப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 23 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் 450 ரூபாவாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற மத்திய மாகாணசபை அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
1992 ஆம் ஆண்டுக்கு முன்பு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், சம்பள நிர்ணய சபையின் மூலம் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்பு 1992 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழிற்சங்கங்களும் இணைந்து பேரம் பேசி தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற முறை அமுலுக்கு வந்தது. இந்தக்கூட்டொப்பந்த முறை 23 வருடங்கள் நடைமுறையிலுள்ள போதும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் 450 ரூபாவாக தான் உள்ளது.
வருடத்திற்கு 50 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்திருந்தால் கூட 23 வருடகாலத்தில் இன்றைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,150 ரூபாய் வரை சம்பளம் கிடைத்திருக்கும். இன்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் புதியதொரு சம்பளத்திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளது.
கூட்டொப்பந்தத்தில் பேரம் பேசுகின்றவர்களின் பேரம் பேசும் சக்தி குறைவடைந்துள்ளதா? இதனால் தான் தொழிலாளர்களை சந்திக்கு இழுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
எனவே, இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வேண்டுமென்பதில் அனைத்துத்தரப்பினரும் உறுதியாகவுள்ளதால் தொழிலாளர்களை எவ்விதத்திலும் காட்டிக்கொடுக்காது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
21 minute ago
22 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
39 minute ago
49 minute ago