Kogilavani / 2015 ஜூலை 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா, ஆர்.கோகுலன்
ஹாலி-எல, டிக்வெல தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர், அட்டாம்பிட்டி வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தோட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக, குளவி கூடொன்று கலைந்து, கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களின் 8 பெண்களும் 6 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஊவா மாகாண தமிழ்கல்வி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.



2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026