Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சாமிவேல் சுதர்ஷினி
'ஆசிரியர் உதவியாளர்கள்; என்ற பதத்தை நீக்கி அவர்களும் ஆசியர் சேவைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். மேலும், ஆசியர் சேவையிலுள்ள அனைத்து சலுகைகளும் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசியர் உதவியாளர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட் வேண்டும்' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்காக நியமிக்கப்பட்டவர்களை, உடனடியாக ஆசிரியர் சேவையின், தரம் 2 அல்லது 3 க்குள் உள்ளவாங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையகத்தில் ஆசிரயர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான மாதந்த கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பில் நேற்று (20) அவருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொண்டுவரப்பட்ட யாப்பின் பிரகாரம் ஆசிரியர் உதவியாளர்களாக யாரையும் நியமிக்க முடியாது. பயிற்சியின் பிரகாரம் ஆசிரியர் நியமனத்துக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரையும் ஆசிரியர் சேவை தரம் 2 மற்றும் தரம் 3க்குள் நியமிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில, தற்போது உதவி ஆசியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளும் முறையாக வழங்கப்படவில்லை.
மலையகத்தில் உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் கொடுப்பனவு தொடர்பில் இதுவரை எனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்கப்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026