Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஊவா தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத குறைபாடுகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பேன்' என இலங்கை தொழிலாளர் காங்கரிஸின் முதன்மை வேட்பாளரும் பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கா.மாரிமுத்து உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், தோட்ட சேவையாளர்கள் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளனர். தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களைப் போல பலமும் சக்தியும் இவர்களுக்கு இல்லை.
தோட்ட சேவையாளர்களுக்கான சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகள், உதாசீனப் படுத்தப்படுகின்றன. சேவையாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றார்கள். இவர்கள், பெருந்தோட்டங்கள் இயங்குவதற்கும் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஆழமாக அமைந்து பெரும்பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். இவர்களை குறைத்து மதிப்பிட முடியாது' என்றார்.
'இவர்களுடைய குடியிருப்புக்கள் பழைமையானது. காலத்துக்கு ஒவ்வாதது. இக்குடியிருப்புகளில் திருத்தப் பணிகளும் புனரமைப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. வாழ்வதற்கு உகந்ததல்லாத குடிமனைகளிலேயே பெரும்பாலும் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குடிமனைகளை மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாற்றி அமைப்பது எனது தலையாய பணியாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் பெருந்தோட்ட மக்களதும் இந்த பதவியாளர்களதும் ஆசிரிய, ஆசிரியைகளதும் வர்த்தகர்களதும் நலன்களில் நான், அதீத கவனம் செலுத்துவேன். அவர்களின் விமோசனத்துக்காக பங்காற்ற வேண்டிய பாரிய பொறுப்பு எனக்குள்ளது. இதனால், பதுளை மாவட்ட மக்கள் சகலரும் சேவல் சின்னத்துக்கு புள்ளடியிட்டு சமூக மாற்றத்துக்கு உறுதுணையாக அமைவீர்கள்' என எதிர்பார்க்கின்றேன்' என்றார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026