2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பெண்களின் வாழ்வில் சுபீட்சமில்லை: திகா

Administrator   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

'மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளிகளாக பணிபுரியும் பெண்கள், ஒரு நாளில் அதிகளவான நேரத்தை தமது தொழிலுக்காகவே அர்பணிக்கின்றனர். இருப்பினும் இன்றுவரை அவர்களது வாழ்க்கையில் சுபீட்சம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றும் வகையிலே தற்போது மலையகத்தில் தனிவீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். இதன் ஊடாக வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை பிரிவுள்ள மகளிருக்கான விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (20) ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

'இன்று மலையகத்திலுள்ள தொழிற்சங்களில் அதிகளவில் பெண்களே அங்கத்துவம் வகிக்கின்றனர். இருப்பினும் அவர்களது அடிப்படை தேவைகள் அதிகளவில் பூர்த்தி செய்யப்படாத நிலையிலே இருக்கின்றது. எனவே, அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்ள சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக நாம் நடவடிக்கை எடுப்போம்.

10 ஆண்டு திட்டத்தை மலையகத்திலும் அமுல்படுத்தி பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க உள்ளோம். இதன் ஊடாக மலைகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பெண்களுக்கான முக்கியத்துவத்தை நாம் கட்டாயம் வழங்குவோம்.

1,000 ரூபாய் சம்பளத்தை பெற்று தருவேன் என கூறி சிலர் பெண்களையும் ஏனையோரையும் ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் அரசியல் அந்தஸ்;து வழங்கி ஏமாற வேண்டாம்.

'ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தமிழ் முற்போக்கு கட்சியின் உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றி பெற்ற செய்ய மலையகத்திலுள்ள பெண்கள் உறுதுணையாக நிற்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .