Kogilavani / 2015 ஜூலை 22 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
டயகம, மேற்கு முதலாம் பிரிவில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தாம் அச்சத்தில் வாழ்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்படி பகுதியின் குடியிருப்பை அண்மித்த பகுதி காடென்பதால் அங்கிருந்து இரவு நேரங்களில் வரும் சிறுத்தைகள் தமக்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வீடுகளில் வளர்த்துவரும் கால்நடைகளையும் இச்சிறுத்தைகள் தமக்கு உணவாக்கிகொள்வதால் கால்நடைகளை வளர்ப்பதிலும் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும் போது சிறுவர்களை தனியாக வீட்டில் விட்டு செல்வதிலும் சிரமங்களுள்ளதாகவும் தமது பகுதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி டயகமை பொலிஸை நாடியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் டயகம பொலிஸை தொடர்புகொள்ள முயன்ற போதும் முயற்சி பலனளிக்கவில்லை.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026