2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

அம்பதென்னை பகுதியில் ரூ.5 இலட்சம் கொள்ளை

Kogilavani   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, அம்பதென்னை  பகுதியில் நபர் ஒருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சந்தேகநபரை, நேற்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி விற்பனையில் தனக்கு கிடைத்த முற்பணத்தை கொண்டுசெல்கையில் அவரை பின்தொடர்ந்த சந்தேக நபர், அம்பதென்னையில் வைத்து வழிமறித்து குறித்த நபரை தாக்கியுள்ளதுடன் அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார், சந்தேக நபரை நேற்று காலை கைதுசெய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .