Kogilavani / 2015 ஜூலை 23 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசி, அலைபேசிக்கான மீள்நிரப்பு பணத்தை (ரீலோட்) சக மாணவர்களிடமிருந்து பெற்றுகொண்டு மாணவனுக்கு தர்மஅடி விழுந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
மாணவனொருவன் தனது பாடசாலையில் கல்வி பயின்றுவரும் சக மாணவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசியுள்ளார். மாணவர்கள் காதல் வலையில் வீழ்ந்ததும் அவர்களிடமிருந்து 1,000 ரூபாய்க்கும் மேலதிகாமான தொகையை அலைபேசிக்கான மீள்நிரப்பு பணமாக பெற்றுகொண்டுள்ளான்.
தம்முடன் பேசியது பெண் அல்ல மாணவனே என்பதை அறிந்துகொண்ட ஏனைய மாணவர்கள் மேற்படி மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டதால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றான்.
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார், மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன் அலைபேசிக்கு வரும் அநாமதைய அழைப்புகள் குறித்து அவதானமாக இருக்கமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026