Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
'ரணில் விக்கிரமசிங்கவின் சரித்திர வரலாற்றை எடுத்துக்கொண்டால் அவர், இதுவரையிலும் 29 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி 30 ஆவது தடவையாகவும் தோல்வியடைந்து, தோல்விச்சாதனை படைக்கவுள்ளார்' என கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.
'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்கள் பெறமுடியுமாக இருந்தால் ஏன் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கின்றது?' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கேகாலை, ரம்புக்கனை பிரதேசத்தில் புதன்கிழமை(22) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'ஐ.தே.க., படுதோல்வியடையும் என்பதை அக்கட்சிக்காரர்கள் உணர்ந்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தர்மத்தினால் ரணில் விக்கிரமசிங்க குறுக்கு வழியில் பிரதமரானார். தனது தலைமையில் உள்ள ஐ.தே.க., தனியாக வெற்றிபெற்று ஆட்சி அமைக்காது' என்பது ரணிலுக்கு தெரியும்' என்றார்.
'எதிர்வரும் 18ஆம் திகதி முன்னாள்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமர் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை எவராலும் தடுக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சி அமைத்து இந்நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து இந்நாட்டின் அபிவிருத்தியை சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்வோம்' என அவர் மேலும் கூறினார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026