Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
ஊவா மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு 23,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதுதொடர்பாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் விளக்கம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ் அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர்களுக்கான சம்பளத்தை பொருத்தவரையில் மூன்றாம் வகுப்பின் இரண்டாம் தரத்தினுள் (3-ஐஐ) உள்ளீர்க்கப்படுகின்ற கற்பித்தலில் தேசிய டிப்ளோமா தகைமையுள்ள ஆசிரியர்களுக்கு மாதாந்த அடிப்படை சம்பளமாக 14,640 ரூபாயும் அனைத்து மேலதிக கொடுப்பனவுகள் அடங்கலாக மாதாந்தம் ரூபாய் 36,557.20 வழங்கப்படுகின்றது.
மூன்றாம் வகுப்பின் தரம் 1 இல் (3-II) உள்ளீர்க்கப்படுகின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,540 ரூபாய் அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவுகள் அடங்கலாக ரூபாய் 37,691.20 மாதாந்த வேதனமாக வழங்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில், ஒரு மாகாணத்தில் மட்டும் பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு 23,500 ரூபாய் வழங்கப்படும் என்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்' என்றார்.
'அவ்வாறு வழங்கப்படுமாயின் அது ஏனைய ஆசிரியர்கள் மத்தியில் சம்பள முரண்பாட்டை உருவாக்கும். இதுதேர்தல் காலம் என்பதால் இவ்வாறான வதந்திகள் வெளியாவது சாதாரண விடயமாகும்' என்றார்.
எனவே, ஆசிரியர் உதவியாளர்கள் இவ்விடயத்தை நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும். நாட்டில் எல்லோருக்கும் பொதுவான சட்டம் இருக்கின்றபோது ஒரு மாகாணத்தில் மட்டும் சட்டத்தை மாற்றியமைக்க முடியாது. அவ்வாறாயின் அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைந்தே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். 6,000 ரூபாய் மாதாந்தம் சம்பளம் என்பது இன்றைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
'இதன் காரணமாக அவர்களுக்கு நாம் மாதாந்த கொடுப்பனவாக 10,000 ரூபாய் வழங்க வேண்டுமென கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். தேர்தலின் பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என அவர் கூறியுள்ளார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026