2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்தின் ஜன்னல்களை உடைத்து கொள்ளை

Kogilavani   / 2015 ஜூலை 25 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு,இராமசந்திரன்

தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜன்னல்கள்  உடைக்கப்பட்டு ஆலயத்தினுள் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை தலவாக்கலை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

ஆலய உண்டியலிலுள்ள பணம், அம்மன் கழுத்திலிருந்த தாலி, டி.வி.டி. பிளேயர் உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசகர் வழமைபோன்று வியாழக்கிழமை இரவு ஆலயத்தை மூடிவிட்டு சென்றபின்பே இவ் அசம்பாவதிம் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .