Kogilavani / 2015 ஜூலை 26 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பிரித்துக்கொடுக்க போகிறார் என எதிர்க் கட்சிகள் போலி பிரசாரம் செய்து வருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஆட்சியில் இருந்த காலங்களில் அவ்வாட்சியை மாற்றுவதற்கு நான் ஒருபோதும் துணைபோகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
'இன்று எதிர்க் கட்சிக்கு கூறுவதற்கு எவ்வித தேர்தல் சுலோகங்களும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க நாட்டை பிரித்து கொடுக்க போகிறார் என்ற ஒரே கருத்தையே தொடர்ந்து கூறிவருகின்றனர். இது முற்றிலும் பொய்யான பிரச்சாரமாகும்.
கடந்த அரசாங்கத்தில், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். பௌத்த மதத்ததுக்கே அபகீரத்தியை ஏற்படுத்தும் விதத்தில் சில இனவாத இயக்கங்கள், சிறுபான்மையினறுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டன. அரசியல் இலாபம் கருதி இவர்களுக்கு அப்போதைய அரசு ஆதரவு வழங்கியது. இதன் விளைவு மிகவும் பார தூரமானதாக அமைந்திருந்தது' என்றார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026