2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை: மக்கள் மத்தியில் பீதி

Kogilavani   / 2015 ஜூலை 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

மலையகத்தில் தொடரும் ஆலய உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பீதி நிலவுவதாக தெரியவருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக, மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள  இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு ஆலய சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, ஊவாக்கலை, மட்டுக்கலை, தலவாக்கலை,  நானுஓயா,  லூசா ஆகிய தோட்டங்களிலுள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன் இங்கு திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டியுள்ளனர்.

பொலிஸாரின் அசமந்தபோக்கே இதற்கு காரணமென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலய உடைப்புக்கெதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .