2026 மே 09, சனிக்கிழமை

dd

இரு ஆலயங்களில் கொள்ளை

Kogilavani   / 2015 ஜூலை 26 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ், மு.இராமசந்திரன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மற்றும்  கிறேட்வெஸ்டன் ஆகிய இரு தோட்டங்களிலும் உள்ள ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நானுஓயா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவுகள், சனிக்கிழமை (25) இரவு உடைக்கப்பட்டடு ஆலயத்திலிருந்த பொருட்கள் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த தாலி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  ஆலய நிர்வாகத்தினர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நேற்று (26) முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கமைய சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிஸார் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இப்பகுதியிலுள்ள நபர் ஒருவர் 11 மணியளவில் தனது வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு சென்றுக்கொண்ருக்கும் போது ஆலயம் திறந்திருப்பதை  அவதானித்து, ஆலய பூசகரிடம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஆலய பூசகர் மற்றும் தோட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.  இதன்போதே, ஆலயத்திலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதை கண்டறிந்து  தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜன்னல்கள்  வெள்ளிக்கிழமை(23) உடைக்கப்பட்டு ஆலயத்தினுள் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக   தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .