Sudharshini / 2015 ஜூலை 26 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பத்து வருட காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், கண்டி மாவட்டத்தில் ஐந்து சதத்துக்கேனும் சேவை செய்யவில்லை என கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அக்குறணை நகரில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு ஏற்றவாரே ஐக்கியம் மற்றும் ஒற்றுமையான கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் கீதம் மட்டுமே மூன்று மொழிகளிலும் இருக்கும் ஒரு கீதமாகும். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பாதுகாத்து அவர்களுக்கும் சரிசம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.
2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, மலேசியாவின் உதவியுடன் கண்டி–கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பில் திட்டமிடப்பட்டது.
இருந்தபோதும் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அத்திட்டம் கைவிடப்பட்டது. மேலும், ஏனைய பகுதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. கண்டி மாவட்டத்தை அவர் முற்றிலும் மறந்து விட்டார். 2005ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் மஹிந்த தோல்வியுற்றதன் காரணமாகவே இவ்வாறு கண்டி மாவட்ட மக்கள் பழிவாங்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026