Sudharshini / 2015 ஜூலை 28 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித்த ராஜபக்ஷ, எஸ்.சுஜித்தா, எம்.செல்வராஜா
போதையிலிருந்து விடுபட உயிர்ப்புடன் கூடிய நாடு என்ற தொனிப்பொருளில் மலையகத்தின் இருவேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் செவ்வாயக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டன.
லிந்துலை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையுடன் இணைந்து கல்வி அமைச்சு, இலங்கை பொலிஸ், சுகாதார அமைச்சு, மதுவரித் திணைக்களம், நுகர்வோர் அதிகார சபை மற்றும் தேசிய ஒளடதங்கள் கண்காணிப்புச் சபை ஆகிய அமைப்புகள் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருந்தன.
இதன்போது மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள், சமூகபிரச்சனைகள், குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலைகள், கல்வி பாதிப்பு போன்றவற்றில் ஏற்;படும் பாதிப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை, கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம்


மெரயா தமிழ் மஹா வித்தியாலயம்


16 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
9 hours ago