Kogilavani / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன் இவர்களை நாளை செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவரை, பொகவந்தலாவை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொகவந்தலாவையை சேர்ந்த மேற்படி ஐவரும் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொகவந்தலாவ, பொகவனா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நீண்டகாலமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்தவர்களை சுற்றி வளைக்கும்போது அவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவையில் உள்ள சில மாணிக்ககல் வியாபாரிகள் இந்த சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த பண்ணை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago