Kogilavani / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தா பணத்தைகொண்டு மக்களுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவையாற்றி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களிடமிருந்து பெறும் சந்தா பணத்தை என்ன செய்கின்றது? என பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஏனைய தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றது என எமக்கு தெரியாது. ஆனால், மக்களிடமிருந்து வாங்கும் சந்தா பணத்தை மக்களுக்கே காங்கிரஸ் செலவு செய்கின்றது.
அதுமட்டுமன்றி தோட்ட தொழிலாளர் ஒருவர், ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவரை சாதாரண நீதிமன்றம் முதல் மேல் நீதிமன்றம்வரை அழைத்துசெல்வதுடன் அவரது வழக்கின் முழுசெலவையும் இ.தொ.கா.வே ஏற்றுக்கொள்கிறது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் இ.தொ.கா வழங்கி வருகிறது' என்றும் அவர் கூறினார்.
'இ.தொ.கா தலைமையில் ஏதேனுமொரு தோட்டத்தில் போராட்டம் நடந்து, அப்போராட்டம் 30 நாட்களை கடந்தால் அரை நாள் ஊதியத்தை வழங்குவதுடன் அவர்களுக்கு ஒரு மாதத்துக்கான உணவு பொருட்களை வழங்குவோம். இவ்விடயம் மஸ்கெலியாவிலுள்ள தொழிலாளர்களுக்கு தெரியும். சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்' என்று கூறினார்.
'சில தொழிற்சங்கங்கள் 2,000 ரூபாயும் 5,000 ரூபாயும் வழங்குவதாகவும் ஏன் இ.தொ.காவுக்கு வழங்க முடியாது? என்றும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இவ்வாறான பழக்கம் இ.தொ.காவுக்கு கிடையாது. இ.தொ.கா மக்களிடமிருந்து பெரும் சந்தா பணத்தில் மேற்கூறிய செயற்றிட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது' என அவர் மேலும் கூறினார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago