Sudharshini / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
குளியாப்பிட்டியிலுள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
'குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து 14 தேர்தல் தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். அதேபோல விருப்;பு வாக்கு விடயத்திலும் அவரைத் தோற்கடித்துக் காட்டுவோம். இம்மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதால் முஸ்லிம்களுடைய முழுமையான வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்லும்' என்றும் அவர் கூறினார்.
குருநாகல் மாவட்டத்திலுள்ள கல்வியலாளர்களை திங்கட்கிழமை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'எதிர்வரும் தேர்தலின் பின்பு, குளியாப்பிட்டிய வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்படவுள்;ளது. பொக்ஷோகன் கார் தொழில் பேட்டையை இங்கு ஆரம்பிக்கவுள்ளோம். தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அது உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது என எதிர்பார்க்கின்றேன்.
கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்கு பிறகு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒருவாரத்தில் பாடசாலை மாணவிகளின் பர்தா விடயம் தொடர்பாக அதிகாரிகள் என்னிடம் முறையிட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனவாத அரசியலை ஊக்குவித்திருந்தார். இதனாலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்பு, இவ்விடயம் தொடர்பாக உடனடியாக கவனத்தில் எடுத்து முஸ்லிம்களுடைய கலாசாரத்தையும் தனித்துவத்தையும் கருத்திற் கொண்டு மாணவிகள், பர்தாவை அணிவதற்கு முழு அங்கிகாரமும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தவுள்ளேன். அத்துடன் தேர்தலின் பின்பு சகல பாடசாலைகளுக்கும் அதன் சுற்று நிரூபத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்' என்றும் அவர் கூறினார்.
'கொழும்பில் முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்வி பயில்வதற்கென அநேகமான பாடசாலைகள் அமைந்துள்ளன. ஆனாலும் குருநாகல் மாவட்டத்தில் அவ்வாறான பாடசாலைகள் இல்லை. குருநாகல் மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுடைய கலாசாரத்துக்கு அமைவாக பாடசாலையொன்றை அமைப்பது அவசியம்;. அதற்கான செயற் திட்டங்களை ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவேன்;' என்றும் அவர் கூறினார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago