Kogilavani / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொரிஸ் என்டனி
'திருடன் திருடன் எனக் கூறிக்கொண்டிருந்தவர்கள் திடீரென கொலைக்காரன் என கூறுவதற்கு திட்டமிடுகின்றனர். வடக்கிலுள்ள சிலர், நான் கொலைக்காரன் என்று கூறிவருகின்றனர். அவர்களுடைய பிள்ளைகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளை பறித்து வீசியதுடன் அவர்களை சுதந்திரமாக நடமாடச் செய்தது நான் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்' என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஐ.ம.கூ.வின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவை ஆதரித்து நிவித்திகலை நகரத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'எமது ஆட்சியில் கல்வி அபிவிருத்திக்காக 1,000 பாடசாலைகளை கட்டுவித்தோம். அதில் சுமார் 250 பாடசாலைகளை நாம் மாணவர் பாவனைக்காக திறந்து வைத்தோம். ஏனைய பாடசாலைகளை திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளிக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை.
நாட்டில் இன்று அராஜகம் தலைத்தூக்கியுள்ளது. வெளிநாடுகளில் ஒளிந்திருந்த பாதாள கோஷ்டியினர் மீண்டும் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேரி உள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் செய்வதறியாது திகைப்படைந்துள்ளார்கள்
'புதிய பாதை அபிவிருத்தி' எனும் போர்வையில் நான்கு கிலோ மீற்றர் பாதை அபிவிருத்திக்காக, பல பில்லியன்களை பெற்றுள்ளனர். தற்போது நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது' என கூறினார்
பத்தல் கைத்தொழிலை (மாணிக்கக் கைத்தொழிலை) மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் தற்பொழுது மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்ததும் பத்தல் கைத்தொழிலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குவோம். அரிசி, பருப்பு உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்குவேன்.
தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் அனைத்தையும் மீண்டும் மேற்கொள்வேன்' என குறிப்பிட்டார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago