Sudharshini / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதும் கண்காணிப்பதும் சிவில் சமூகத்தின் பொறுப்பு. இதனை செய்வதே பிரிடோ நிறுவனத்தின் நோக்கமென அதன் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.
பிரிடோ நிறுவனத்தின் கல்வி முன்னேற்ற மற்றும் சமூக பணிகளுக்கு எதிர்காலத்தில் உதவுவதாக உறுதியளித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் அவர், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
அக்கோரிக்கைகளில், பெருந்தோட்ட அபிவிருத்தி தேசிய நீரோட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும், பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகள் டிரஸ்ட் நிறுவனத்தின் அழுத்தங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டியதுடன் பெருந்தோட்டங்கள் தேசிய நீரோட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக மட்டுமே டிரஸ்ட் நிறுவனத்தின் இருப்பு நியாயப்படுத்தப்பட வேண்டும், பெருந்தோட்டங்களில் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்' என கோரியுள்ளனர்.
இதேவேளை, 'தோட்டங்கள் தோறும் முறையான முன்பள்ளிக் கல்வி வசதிகளை ஏற்படுத்தினால் 5,000க்கும் மேற்பட்ட யுவதிகளுக்கு சமூக அங்கீகாரமுள்ள சுய வேலைவாய்பை வழங்கலாம், முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மாகாண சபைகள் மூலம் சீரான கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், தற்போது திறந்த பல்கலைக்கத்தால் கண்டியிலும் ஹட்டனிலும் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுக்காக டிப்ளோமா பயிற்சி நெறி பதுளை, கேகாலை, பண்டாரவலை, இரத்தினபுரி போன்ற ஏனைய பெருந்தோட்டப் பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இந்த சேவைகள் அனைத்தும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவேண்டும், தற்போது நியமிக்கக்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு ஆசிரியர் தொழிலின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கொடுப்பனவு வழங்குவதோடு அவர்களை சேவையில் தக்க வைக்க அவசியமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
ஆசிரியர் முகாமைத்துவ சேவையில் SLES மலையக தமிழருக்கு விகிதாசார அடிப்படையில் பதவிகள் கிடைப்பதற்கான சூழல்களை உறுதிசெய்தல், ஹட்டனில் திறந்த பல்கலைக்கழக கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியில் கட்டடம் அமைக்குமாறு பலவருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. இக்கட்டடம் வெளியாருக்கு போகும் ஆபத்து இருப்பதால் உடனடியாக இந்தக் காணியில் திறந்த பல்கலைக்கழகத்துக்கான கட்டடம் அமைக்கப்பட வேண்டும்' என்றும் கோரியுள்ளார்.
நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கிளையை நிறுவ ஆவன செய்தல், கல்வி அபிவிருத்திக்காகவும் சமூக மேம்பாடடுக்காகவும் பிரிடோ நிறுவனம் ஆற்றியுள்ள சேவையையும் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அபேட்சகர்கள் மூவரும் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago