Sudharshini / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
அக்கரப்பத்தனை, பசுமலை விஹாரைக்குச் சொந்தமான காணியை விஹாரைக்கே வழங்க வேண்டுமெனக் கோரி பிரதேச மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி விஹாரைக்கு சொந்தமானக் காணியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதுடன் அதற்கு போலி ஆவணங்களையும் தயாரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸிலும் முறையிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 400 வருடங்கள் பழமையான இக்காணியை, விஹாரைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரினர்.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago