Kogilavani / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன் மாவட்ட தலைவி ஏ.ரீட்டா, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர், பழனி திகாம்பரத்துக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நோர்வூட் பகுதியில் செவ்வாய்கிழமை (12) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுபோதே அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ரீட்டா மேலும் தெரிவிக்கையில்,
'நான் பல வருடங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்து செயற்பட்டவள். எனினும், தற்போது மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துவதற்காகவுமே இக்கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரான பழனி திகாம்பரத்துடன் இணைந்து, நுவரெலியா மாவட்டத்தில் எனது பணிகளை முன்னெடுக்கவுள்ளேன். மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை மாற்றினோம். மலையக மக்கள் தங்களது மனதிலிருந்து வெற்றிலை சின்னத்தை இல்லாதொழித்துள்ளார்கள். எனவே, மீண்டும் அதற்கு வாக்களித்தால் நிம்மதியாக வாழ முடியாது. இதனாலேயே நான் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்தேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago