Sudharshini / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இலங்கை தேசியத்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்குமிடையே நேற்று (12) ஏற்பட்ட மோதலில், இ.தொ.கா ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இலங்கை தேசியத்தோட்ட தொழிலாளர் சங்க ஆதரவாளர்களுக்குமிடையே நமுனுகுலை பகுதியில் வைத்து இடம்பெற்ற வாய்த்தர்க்கமே இவ்வாறு மோதலாக மாறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக எல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து, இலங்கை தேசியத்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இ.தொ.கா.வின் முன்னாள் எல்ல பிரதேசசபை உறுப்பினர் பி.மாணிக்கராஜா, எல்ல பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, எல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago