Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புஸல்லாவ, ரொக்ஷெல் தோட்டத்தைச் சேர்ந்த சுகதபால ரேணுகா (வயது 12) சிறுமி, பிறந்தது முதல் அரியவகை நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது தோலில் ஒருவகையான படை காணப்படுவதுடன் வலது கண் பார்கும் திறனை இழந்துள்ளது.
இவரது வலது கண்ணில் வெண்படலம் ஏற்பட்டுள்ளதால் சத்திரசிகிச்சைக்கூடாக மாற்றுக்கண் பொருத்த வேண்டியுள்ளதாகவும் இதற்கு இலட்சக்கணக்கில் செலவாகுமென மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால் வறுமையில் வாடும் இவரது குடும்பம் செய்வதறியாது திண்டாடுகின்றது.
இவற்றை சுகப்படுத்துவதற்கு போதியளவான நிதியை அவரது பெற்றோரால் திரட்டிக்கொள்ள முடியாமையால், நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டுமென இச்சிறுமியின் பெற்றோரான சுகதபால புஷ்பராணி கோரியுள்ளனர்.
உதவ விரும்புபவர்கள், Gunansen a sugathapala. A/c no. 8040085114 Commercial Bank Kandy Branch என்ற வங்கி இலக்கத்தில் பணத்தை வைப்பிலிடுமாறும் அல்லது 072-1733075 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறும் கோருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
21 Jun 2025