Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மலையகத்தில் 6 மாவட்டங்களிலும் 1,708,722 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது 1,451,254 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 121,986 வாக்குகளையும் மூன்று மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொத்தமாக 17,107 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதற்கமைவாக ஐக்கிய தேசியக் கட்சியானது மேற்படி 7 மாவட்டங்களிலும் 32 ஆசனங்களை பெற்று 257,468 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 228,920 (59.01%) வாக்குகளையும் 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 147,348 (37.98%) வாக்குகளையும் 3 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 5,590 (1.44%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் ஐ.தே.க 138,241(49.84%) வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூ 126,315(45.54%) வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும்; மக்கள் விடுதலை முன்னணி 10,947 (3.95%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க 440,761(55.57%) வாக்குகள், 7 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூ 309152 (38.98%) வாக்குகள், 5 ஆசனங்களையும் ம.வி.மு. 30,669 (3.87%) வாக்குகளையும் இ.தொ.கா 4400 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதற்கமைவாக மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 15 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணம் (பதுளை, மொனராகலை)
மேலும், பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க 258,844 (54.76%) வாக்குகள், 5 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூ. 179,459 (37.97%) வாக்குகள், 3 ஆசனங்களையும் ம.வி.மு 21,445 (4.54%) வாக்குகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10,259 (2.17%) வாக்குகளையும் பெற்றுகொண்டுள்ளன.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 138,136 (52.53%) வாக்குகள், 3 ஆசனங்களையும் ஐ.தே.க 110,372 (41.97%) வாக்குகள், 2 ஆசனங்களையும் ம.வி.மு 13,626 (5.18%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதற்கமைவாக மொனராகலை மாவட்டத்தை ஐ.ம.சு.கூ வெற்றிக்கொண்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் (கேகாலை, இரத்தினபுரி)
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ 323,636 (51.19%) வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் ஐ.தே.க. 284,117 (44.94%) வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் ம.வி.மு 21525(3.40%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தில், ஐ.தே.க. 247467 (49.52%) வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூ 227208 (45.47%) வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் ம.வி.மு. 18184 (3.64%) வாக்குகளையும் இ.தொ.கா 2,448 (0.49%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025