Kogilavani / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் மனமறிந்து செயற்பட்டதானாலேயே கூட்டணிக்கு மலையகத்தில் மகத்தான வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களின் மனநிலைக்கு தக்கவாறு நாம் செயற்பட்டதன் காரணமாகவே நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 'நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், ம.திலகராஜ் ஆகிய மூவரும் வெற்றிப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரான திகாம்பரமும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் முன்னெடுத்த திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களை ஈர்த்தமையே இந்த வெற்றிக்குக் காரணமாகும். தமது அரசியல் அதிகாரத்தினால் மக்களை அடிமைப்படுத்திய அரசியல் தலைமைகளுக்கு இத்தேர்தல் முடிவு, தகுந்த சாட்டையடியாகும்.
இந்த வெற்றி தமிழ் முற்போக்கு முன்னணிக்கு கிடைத்த வெற்றியல்ல. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வெற்றியாகும்.
அமைச்சர் திகாம்பரத்துக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டியுள்ளனர். இந்த வெற்றியைக் கொண்டாடுகின்ற எமது செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்,
ஏனையவர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் செயற்படாமல் அனைவரையும் தலைவர் வழியில் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லவேண்டியது எமது பாரிய பொறுப்பாகும்.
அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்து வருகின்ற தனி வீட்டுத்திட்டம், காணி வழங்கும் திட்டம் உட்பட தோட்ட மக்களுக்கான உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்கள் தகுந்த அங்கீகாரம் வழங்கியிருப்பது மேலும் எமக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது' என்றுக் கூறினார்.
50 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago