Kogilavani / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஈட்டிய வெற்றியானது மஹிந்த தலைமையிலான கோஷ்டியினரால் நாட்டில் என்றுமில்லாத அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்ட இனவாதஇ மதவாத கொள்கைகளுக்கு விழுந்த பேரடியாகும்' என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின்; பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் விதெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போதும் மகிந்த ராஜபக்ஷ மிக மோசமான இனவாத பிரசாரங்களை முன்வைத்தே தேர்தலில் வெற்றியீட்ட முற்பட்டார். நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தத்தில்; வெற்றியீட்டிவர் தான் ஒருவரே என்றும் தனக்கு நிகர் எவரும் இல்லையென்றும் தன்னை முழு உலகுக்குமே கதாநாயகனாக காண்பித்து வந்துள்ளார்;. இந்நாட்டு மக்களிடம் எதை கூறினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என மிதமிஞ்சிய நிலையில் அவர் நடந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதி தேர்தில் அவர் தோல்யடைந்திருந்தாலும்கூட கடந்த பொதுத் தேர்தலின்போது சிங்கள தேசம்இ சிங்கள பௌத்த இனம் என்றும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகி நாடு பிரிவினையை எதிர்கொள்ளும் போன்ற பிரசாரங்களையே அவரும் அவரது கோஷ்டியினரும் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டு மக்கள் இவ்வாறான கூற்றுக்களை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
இவ்வாறான பிரசாரங்கங்களுக்கெதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள சிறுபான்மை மக்கள், நாட்டில் நல்லாட்சியை வேண்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அணியை வெற்றி பெறச்செய்து இனவாத அரசியலைத் தோற்கடித்துள்ளனர்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
50 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago