2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

2019 இல் ’கடன் சுமையிலிருந்து இ.போ.ச மீளும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்துச் சபையை, கடன் சுமையிலிருந்து மீட்டு வருவதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, இ.போ.ச கடன் சுமையிலிந்து மீண்டிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவுக்குப் புதிததாக ஐந்து பஸ்களைக் கையளிக்கும் நிகழ்வு, கொழும்பு, நாரஹேன்பிட்டியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருமானம் குறைந்து இருந்ததாகச் சுட்டிக்காட்டியதுடன், இந்நிலையிலிருந்து, இ.போ.ச மீண்டு வருவதாகவும், இன்று அதிக வருமானம் ஈட்டும் துறைகளில், இ.போ.சவும் பலமிக்கதாக மாற்றமடைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.

இ.போ.சவை இந்நிலைக்கு உயர்த்திவிடுவதற்கு, சபையுடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் வழங்கிய ஒத்துழைப்பே காரணம் என்று கூறிய அவர், அவர்களுக்கு இவ்வேளையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஊழியர்களைத் திருப்பதிப்படுத்துவதன் காரணமாகவும் நிறுவனமாக இ.போ.சவின் மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ரொக்கப்பணத்தில் ஐந்து பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக, ஹட்டன் டிப்போவைப் பாராட்டிய அவர், ஏனைய டிப்போக்களுக்கு முன்மாதிரியாக ஹட்டன் டிப்போ செயற்பட்டு வருவதாகவும் ஹட்டன் டிப்போ மேலும் சிறந்த சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஹட்டன் டிப்போவானது, கிடைக்கப்பெற்ற வருமானம் மற்றும் இலாபத்தைக் கொண்டு, மேற்படி ஐந்து பஸ்களையும் சுமார் 20 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணத்தில் கொள்வனவு செய்துள்ளது.

ஜீ.பி.எஸ் உள்ளிட்ட சகல வசதிகளுடனும் கூடிய பஸ்களே, இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள், ஹட்டனிலிருந்து போடைஸ், டயகம, ஹட்டன் ஹோல்டன் சாமிமலை, தலவாக்கலை, ராணிவத்தை, மடக்கும்புர, கலவெல்தெனிய போன்று பிரதேசங்களுக்குச் சேவையில் ஈடுபடவுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .